எல்லோரும் கால்களால் நடக்கக் கதைகள் மட்டும் உதடுகளால் நடக்கின்றன. இரவுகளில் காதுகளுக்குள் ஒளி கொடுக்கும் கதைகளுக்குச் சூரியனை விட அதிக வெளிச்சம். அத்தகைய கதைகளைக் கேட்கும் குழந்தைகள்
மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.
தொழில்நுட்பக் கருவிகளாலும் அவசர உலகத்தாலும் மனப்பாடம் செய்யும் கல்வியாலும் சுருங்கிப் போன
குழந்தைகளின் உலகை ஆசுவாசப்படுத்த கதைகள்தான் ஒரே வழி.
பாடப் புத்தகங்கள் கடந்த வாசிப்பைக் குழந்தைகளிடம் ஊக்குவிப்பதன் வழியே நல்ல ஆரோக்கியமான மன இறுக்கம் குறைந்த ஒரு பொருத்தப்பாடு உள்ள சமூகத்தைக் கட்டமைக்க முடியும்.
குழந்தைகளின் கைகளில் அவர்கள்
விரும்பும் புத்கங்களின் கனம் கூடக் கூட பூமியின் கனம் குறைந்து கொண்டே வரும் என்று நான் நம்புகிறேன்.
- பூவிதழ் உமேஷ்
Be the first to rate this book.