‘தமிழர் இனவரைவியல் கழக’ நண்பர்கள் செய்து வரும் ஆய்வுப்பணிகளின் ஒரு பகுதி இந்த நூல் என்று தொகுப்பாசிரியர் திரு.ந.இரத்தினக்குமார் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
1933ம் ஆண்டு முதல் - 2024ம் ஆண்டு வரையில் இதுவரை வெளியாகியுள்ள குறவர் இனக்குழுக்கள் குறித்த சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். 25 படைப்பாளிகளின் பங்களிப்பில் உருவாகியிருக்கும் இத்தொகுப்பு ஓர் இனக்குழுவின் வாழ்வியலை மையப்படுத்தி கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ளும் பிரதிகளின் தொகையாகும். நாட்டார் - தேவதைக் கதைகள், ஆவணக் கதைகள், யதார்த்தக் கதைகள், மாய - யதார்த்தக் கதைகள், பின்நவீனத்துவ மற்றும் பின் காலனியக் கதைகள் எனப் பன்முகமான எடுத்துரைப்பியல் வடிவங்களில் கதைகள் அமைந்துள்ளன. இலக்கியவியல், மானிடவியல், தொல்லியல், பண்பாட்டியல் ஆகிய புலங்கள் ஆய்வுப்பரப்பில் இன்று ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளன. பல்துறை ஆய்வு அணுகுமுறைகளுக்கு இந்நுல் பெரிதும் உதவும். குறிஞ்சி இலக்கியங்களின் நவீன பரிமாணமாக முகிழ்த்துள்ளது இத்தொகுப்பு.
Be the first to rate this book.