இரண்டாம் உலகப் போரின் காலகட்டத்தில் உலகம் ஒரு ஹிட்லரைத்தான் எதிர் கொண்டது. இன்றோ உலகம் முழுவதும் ஹிட்லர்கள் தலைதூக்கியிருக்கிறார்கள்.
இந்தியாவிலும் ஆர்.எஸ்.எஸ். என்றொரு நாசிக் கும்பல் ஆட்சியதிகாரத்தில் அமர்ந்துள்ளது. மோடி என்ற ஹிட்லர் ஏகாதிபத்தியத்தின் சேவகனாக மக்களை ஒடுக்குகிறார்.
அன்று உலகை ஹிட்லரிடமிருந்து காக்க ஒரு ஸ்டாலின் இருந்தார். ஹிட்லரை வீழ்த்தி மனித சமூகத்தைப் பேரழிவிலிருந்து காத்தார். ஆனால் இன்றோ பல ஹிட்லர்கள் உருவாகி நிற்கிறார்கள். இவர்களை எதிர்கொள்ள இன்னும் பல ஸ்டாலின்கள் தேவை!
இன்றைய சூழலில் ஹிட்லர்களை எதிர்கொள்ள தோழர் ஸ்டாலினின் எழுத்துக்கள் மிகவும் அவசியமானவை ! அதனை உணர்ந்து தோழர் ஸ்டாலினின் எழுத்துக்களை கடும் உழைப்பைச் செலுத்தி தமிழில் கொண்டு வந்துள்ளார் அலைகள் வெளியீட்டகத்தின் தோழர் சிவம்.
Be the first to rate this book.