எல்லா விஷயங்களையும் வெளிப்படையாகச் சொல்கிற ஒரு துயரம் நிறைந்த கதைதான் இது. நாம் எதிர்கொள்ள வேண்டி வருகிற கஷ்டங்களை நினைத்து நீங்கள் கண்ணீர் வடித்தால் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். நல்லவளான பாவம் ஜஸ்டினின் பயங்கரமான துயரக் கதையை
வார்த்தைகளின் மூலம் வரைந்து காட்ட நாங்கள் கட்டாயம் ஆனவர்களானோம்.
அவள் எங்களிடம் சகிக்க வேண்டுமென்று விரும்புகிறோம். படிக்கும்போது மேடம் லோர்கினைப் போல உங்களுக்கும் அதன் பயன் கிடைக்கும். அவரைப் போலவே உங்களுக்கும் ஒரு விஷயம் புரியும். யதார்த்த மகிழ்வின் இடம் நன்மையே ஆகும். பூமியில் நன்மை தண்டிக்கப் பட்டால் கடவுள் அனுமதித்தால் கூட அவனது லட்சியத்தை நாம் கேள்வி கேட்கக் கூடாது. நன்மைக்கான பிரதிபலன் ஒருவேளை அடுத்த ஜென்மத்திலாக இருக்கலாம். புனித பைபிளில் சொல்வதைக் கேளுங்கள்.
“தர்மத்தை கடைப்பிடிப்பவனை மட்டுமே கர்த்தர் பரிசுத்த ஆத்மாவாக அறிவிக்கிறார்.” சரிதான். நன்மையின் பிரதிபலன் நன்மை என்று நினையுங்கள்.
Be the first to rate this book.