"இப்பவெல்லாம் யார் சாதிபார்க்கிறாங்க..யார் சாதியைக் கேக்கிறாங்க.." இப்படி வித்தாரம் பேசுகிறவர்களை நாம் அன்றாடம் சந்திக்கிறோம் . தர்மபுரி ரணத்தைக் காட்டிப் பேசினால்கூட மழுப்புகிறார்கள். "அதுவா ? அது ஒரு அய்சலேட்டட் இன்சிடெண்ட் .. ஆமாம் விதி விலக்கான நிகழ்வு.. டோண்ட் ஜெனரலைஸ் ..பொதுமைப்படுத்தக்கூடாது," இப்படி வியாக்யானம் வேறு செய்கிறார்கள் . இவர்கள் தூங்குவது போல் நடிப்பவர்களா அல்லது அப்பாவிகளா? முடிவை வாசகர்களுக்கே விட்டுவிடுவோம். ஆனால் நாம் வாழும் இந்த யுகத்திலும் சாதி மனித்ததை எப்படி குத்திக் கிழிக்கிறது என்பதை இரத்தமும் சதையுமாய் இந்நூல் உரக்க்கப் பேசுகிறது .
5 Condition of the book i received was satisfactory
Condition of the book i received was satisfactory
AnbuChelvan 13-10-2021 09:29 pm