தமிழ் இலக்கியச் சூழலில் நட்புப்'பாராட்டல்' தாண்டி நேர்மையாக விமர்சனம் எழுதுவது என்பது ஒருவிதத்தில் தற்கொலை. அதை மீறி பிடிவாதத்தின் அதிருசியுடன் எழுதப்பட்ட இலக்கிய விமர்சனக் கட்டுரைகளிவை. ரசனையும் தர்க்கமும் பரஸ்பரம் சமன் செய்து, ஒப்பீடுகளும், பொதுமைப்படுத்தல்களும் நிறைந்து படைப்பாளியின் குறுக்குவெட்டுச் சித்திரத்தைத் தருகிற தனித்துவமான விமர்சன அணுகுமுறை இதில் தென்படுகிறது.
ஜெயமோகன், பெருமாள்முருகன் எனத் தீவிர இலக்கியவாதிகள் தொடங்கி, ராஜேஷ் குமார், ரமணிச்சந்திரன் என வெகுஜன எழுத்தாளர்கள் வரை, இடையே கலைஞரையும் இந்நூல் தழுவிக் கொள்கிறது. அவ்வகையில் இதில் ஒரு வாசிப்பு ஜனநாயகமும் உண்டு!
Be the first to rate this book.