விண்ணை முட்டும் கட்டடங்களாகட்டும், உற்பத்தியைப் பெருக்கும் இயந்திரங்களாகட்டும் - இரும்பு இல்லையேல் எதுவுமில்லை.
இரும்பு உலகின் முடிசூடா சக்கரவர்த்தி லக்ஷ்மி மிட்டல். இந்தியா எனும் நாடு மொத்தமாக உற்பத்தி செய்யும் இரும்பைக் காட்டிலும் லக்ஷ்மி மிட்டல் எனும் ஓர் இந்தியரது நிறுவனம் உலகெங்கிலுமாகச் சேர்ந்து உற்பத்தி செய்யும் இரும்பு அதிகம்!
லஷ்மி மிட்டலைப் பொறுத்தவரை இரும்பு என்பது தங்கத்தைக் காட்டிலும் மதிப்பு மிக் கது. பெயரிலேயே லக்ஷ்மியைக் கொண்டிருக்கும் மிட்டல் இன்று உலகின் முதல் ஐந்து பணக்காரர்களுள் ஒருவர்.
அழிவில் இருக்கும் இரும்பாலைகளைக் குறைந்த விலைக்கு வாங்கி இரண்டே வருஷங்களில் ஒவ்வோர் ஆலையையும் லாபம் கொட்டவைப்பவையாக மாற்றுவதில் இன்றுவரை லக்ஷ்மி மிட்டல் அளவுக்கு வெற்றிபெற்றவர் யாருமில்லை. ஏழைமையான பின்னணியிலி ருந்த லஷ்மி மிட்டல் முன்னேறி உலகை வென்றதற்கு முக்கிய காரணம், இந்திய நிர்வாகிகளின் கடுமையான உழைப்பும் சாதனையும்தான்.
Be the first to rate this book.