இந்த நூலின் ஆசிரியர் டெல்லியில் இருந்தபோது, 'இந்தியாவில் முஸ்லிம்களாக உள்ளோர் அனைவரும் இந்துக்களாக இருந்தவர்களே! அவர்களை மறுபடியும் இந்துக்களாக மாற்ற வேண்டும்’ என்பதைக் குறிக்கோளாய் கொண்டு ’சுத்தி இயக்கம்’ ஒன்றை அக்காலத்தில் ‘ஆரிய சமாஜம்’ நடத்தி வந்தது.
அவ்வியக்கத்தின் முக்கிய தலைவர்கள் பலரும் பொது மேடைகளில் அண்ணல் பெருமானார் அவர்களை மிகக் கேவலமாகத் திட்டுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தனர். 1919ம் ஆண்டு சுவாமி சுத்தானந்தா என்பவர் அவ்வண்ணம் ஒரு மேடையில் அண்ணலாரைத் திட்டுவதைக் காணச்சகிக்காத ஒர் இஸ்லாமிய இளைஞன் அவரைக் குத்திக் கொன்றுவிட்டான்.
இஸ்லாம் என்பதே வன்முறையின் மறுபெயர். எடுத்தற்கெல்லாம் கத்தியைத் தூக்குவதே இவர்களின் வழக்கம் என்று காந்தி போன்ற தலைவர்கள் உட்பட ஒருத்தர் விடாமல் அனைவரும் பேச ஆரம்பித்தனர்.
டெல்லி ஜும்மா மஸ்ஜிதில் வெள்ளியுரை நிகழ்த்திய மெளலானா முஹம்மது அலி ஜெளஹர் என்பவர். ’இஸ்லாமைப் பற்றியும் இஸ்லாமிய ஜிஹாதைப் பற்றியும் ஆளுக்கு ஆள் வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டுள்ளார்கள் இங்கே அமர்ந்திருக்கும் இளைஞர்களில் யாரேனும் ஒருவர் இதைப் பற்றி அலசி ஆராய்ந்து இஸ்லாமிய ஜிஹாதைக் குறித்து முழுமையான நூல் ஒன்றை வெளியிடக் கூடாதா என்று எனக்கு ஏக்கமாக இருக்கின்றது’ என அவர் தனது உரையில் ஆதங்க்கத்தோடு குறிப்பிட்டார்.
எதேச்சையாக அவ்வுரையை அபுல் அஃலா மெளதூதி கேட்டுக் கொண்டிருந்தார். மெளலானாவின் வேண்டு கோளை மானசீகமாக ஏற்றுக் கொண்ட அவர் அதற்காக உழைக்கத் தொடங்கினார். 1927 ம் ஆண்டில் புத்தகமாக இந்நூல் வெளிவந்தபோது இவருடைய வயது 23 .
Be the first to rate this book.