போட்டித் தேர்வு எழுதத் தயாராகிக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இந்த நூல் அரிய ஆலோசனைகளைத் தருகிறது. தனியாக படிப்பது, நண்பர்களுடன் சேர்ந்து படிப்பது, வீட்டில் படிப்பது, கோச்சிங் சென்டரில் படிப்பது, வேலை பார்த்துக்கொண்டே படிப்பது, வேலையில் விடுமுறை எடுத்து படிப்பது என்று நம் மனநிலைக்கும் நமது சூழலுக்கும் ஏற்றவாறு எப்படி வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால், படிப்பது முக்கியம் என்கிற மந்திரத்தை வலியுறுத்துகிறார் ஆசிரியர் டாக்டர் விஜயகார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்.
பல லட்சம் பேர் எழுதும் தேர்வுகள் என்பதால், போட்டி கடினமாகத்தான் இருக்கும். எனவே மாணவர்கள், இந்தச் சூழல் கண்டு அஞ்சாமல் ஒவ்வொரு மாணவரும் தாம் அமைத்துக்கொண்ட பாதையில் இலக்கை நோக்கி விடா முயற்சியுடன் செயல்பட வேண்டும். வெற்றி தோல்விகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு நேர்மையான, உற்சாகமான மனநிலையோடு நம்பிக்கை நடை போட்டால் தான் இந்தப் பாதையில் சாதனையாளராக முடியும். இந்த முழு ஈடுபாட்டோடு, முழு அர்ப்பணிப்போடு தேர்வு எழுத காத்திருக்கும் ஒவ்வொரு மாணவனுக்கும் ‘ஜெயிப்பது எப்படி?’ என்ற இந்த நூல் ஒரு பெரும் வரப்பிரசாதமாகும். தொடர்ந்து படியுங்கள் வெற்றியடைய வாழ்த்துகள்!
Be the first to rate this book.