வாழ்க்கையில் வசந்த காலத்தை மட்டுமே வரவேற்கக் காத்திருக்கும் உள்ளங்களே மிக அதிகம். மென்மையான அணுகுமுறையும், திட்டமிட்ட செயல்பாடும் இருந்தால் வெற்றி நம்மை தானாகப் பற்றிக்கொள்ளும். வெற்றியின் வாசல்கள் பல உண்டு, அவ்வாசலுக்குரிய வாட்டமான சாவி எதுவென்று தெரிந்துவிட்டால்போதும், வண்ணமயமான வாழ்க்கை நம் விருப்பப்படி அமைந்துவிடும். உழைப்பைக் கொண்ட உயர்வு என்று ஓடிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரின் வாழ்விலும் வளமும் நலமும் நாளும் வலம் வர வழிகளைக் காட்டுகிறது இந்த நூல். அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் இன்னல்கள், இடர்ப்பாடுகள், வேதனைகள் இருக்கலாம். அவற்றையெல்லாம் முறியடிக்கும் முயற்சியில் முன்னேற்றம் பெற்று, வாழ்வில் முதன்மை அடையும் ரகசியங்களை எடுத்துரைக்கிறார் நூலாசிரியர் டி.ஏ.விஜய்.
Be the first to rate this book.