ஒரு பெரிய நாவலுக்குரிய தேடலையும் அழகியல் செறிவையும் விரிவையும் சிறிய கதைக்களத்துக்குள் அடைப்பவை. முழுமையான கதாபாத்திரங்களும் கதைப் பரிமாணமும் கொண்டவை. தொன்மங்களின் அழகியல் கொண்ட ‘மண்’, ஆழமான ஆன்மிகத் தேடலை முன்வைக்கும் ‘மடம்’, முதல் பாலியல் அனுபவத்தின் விவரிக்கமுடியாத தித்திப்பைச் சித்திரிக்கும் ‘கிளிக்காலம்’, மகாபாரதப் பின்னணி கொண்ட ‘பத்ம வியூகம்’, ஆழ்ந்த குறியீடுகளைக் கொண்ட ‘டார்த்தீனியம்’, எதிர்மறையான சூழலில் ஒரு கலைஞனின் கலைத்தேடலைச் சிலிர்ப்பூட்டும் விதம் சொல்லும் ‘லங்கா தகனம்’ என இக்கதைகள் காட்டும் உலகம் மிக விரிவானது. இலக்கியத்தை அழகனுபவமாகவும் ஆன்மிக அனுபவமாகவும் கருதும் வாசகர்களுக்கான ஆக்கங்கள் இவை.
Be the first to rate this book.