தொன்மை, இயற்கைவளம் தொலைவது குறித்த வலியுணர்த்தும் கவிதைகள் இதில் உள. அரசியற் கவிதைகள் பலவுண்டு இத்தொகுப்பில். வரவேற்கத்தக்கது. ஆனால் அரசியற் கருத்துநிலை, பொதுவாக, கவித்துவத்தை மட்டுப்படுத்தும். அது கருதியோ மற்றோ இவர், நேர்படப்பேசுதல் எனும் புலம்பல் / கொக்கரிப்பால் வாக்கியம் மடக்காமல், சுட்டியுணர்த்துதல் எனும் கவித்துவ அமைதிக்குள் அமைகிறார். புறப்பொருள் பாடுகிற கவிஞர்கள் அருகிப்போன இக்காலத்தில், தனது வாசிப்பின் கனஅளவால் அனுபவத்தால் உலக நலனில் அக்கறைப்பட முடிகிறது நேசமித்ரனுக்கு. காட்சியுணர்வுகளின் துல்லியத்தை முயலும் இவரது உவமங்கள் மட்டுமல்ல இந்த அக்கறையும் தமிழுக்கு கொடைதான்.
- ராஜசுந்தரராஜன்
Be the first to rate this book.