தமிழக ஒடுக்கப்பட்டோர் அரசியல் முன்னோடிகளில் முதன்மையானவர் இரட்டைமலை ஆர்.சீனிவாசன் ( 1860 - 1945 ). அவரின் தன்வரலாற்று நூல் இது. தன் அரசியல் பயணத்தின் பிரதான தருணங்களைத் தேர்ந்தெடுத்துச் சுருக்கமாக இந்நூலில் முன்வைத்திருக்கிறார். 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் நவீன அரசியல் தளம் சார்ந்து தலித்துகளிடையே உருவான அரசியல் எழுச்சி, 20ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சியினூடாக தலித்துகள் மேற்கொண்ட சட்டரீதியான தலையீடுகள் ஆகியவற்றை விவரித்துச் செல்லும் இந்நூல் தனிமனிதரின் அரசியல் பயணமாக மட்டும் நில்லாமல் இந்திய / தமிழக வரலாற்றின் இன்றியமையாத காலகட்டத்தை பிரதிபலிக்கும் வரலாற்று ஆவணமாக மாறி நிற்கிறது. இந்நூலிலிருந்து கிடைக்கும் தரவுகள் மூலம் தாழ்த்தப்பட்டோர் வரலாற்றை மட்டுமல்ல தமிழக அரசியல் வரலாற்றையும் புதிய பரிமாணத்தோடு வாசிக்க இயலும்.
Be the first to rate this book.