காகா காலேல்கர் குஜராத்தியிலும் மராத்தியிலும், ஹிந்தியிலும் புகழ்பெற்ற எழுத்தாளர்; காந்திஜியுடன் நெருங்கிப் பழகியவர். ஓயாமல் பயணம் செய்த சஞ்சாரி. இந்நூல் இவரது சொந்தப் பயண அனுபவங்களை அழகிய சொற்சித்திரங்களாக்கிய கட்டுரைகளின் தொகுப்பு. இந்தியாவின் எல்லா முக்கிய நதி தீரங்களையும், அருவிகளையும், கடலோரங்களையும் இதில் காண்கிறோம். இயற்கையின் எழிலிலே, குறிப்பாக நீரோரத்திலே - மறக்க முடியாத அனுபவங்களை நுட்பமாக வரைந்துள்ளார் ஆசிரியர். வரலாற்றின் நினைவுகளும், புராண இதிகாசங்களின் நிழல்களும், இலக்கிய அணிகளும் இவரது எழுத்திலே தெரிகின்றன. நதிகளை, 'பிரபஞ்சத்தின் தாய்மார்' என்கிறது மகாபாரதம். இந்நூலில் அத்தாய்மாரின் சீராட்டைக் கவியழகுடன் கூடிய கட்டுரைகளிலே வரைந்துள்ளார் ஆசிரியர்.
Be the first to rate this book.