தன் வாழ்க்கையை காந்தியத்தில் தொடங்கி, கம்யூனிஸத்தில் இணைத்துக்கொண்டவர் ப.ஜீவானந்தம். ‘ஒடுக்கப்பட்ட மக்கள், தொழிலாளர்கள் விடுதலை பெறவேண்டும் என்றால், அதற்கு ஒரே தீர்வு, மக்கள் அனைவரும் பொதுவுடைமை பாதையில் செல்வதைத் தவிர வேறு வழியில்லை’ என்று உறுதியாக நம்பியவர் ஜீவா. கொள்கைக்காக, தன் தாய்க்கு இறுதிச் சடங்குகூட செய்ய மறுத்தவர். காங்கிரஸ், சுயமரியாதை இயக்கம், கம்யூனிஸ்ட்டு கட்சி என்று பல அமைப்புகளுக்கு மாறினாலும், ‘மக்களுக்காக எந்த இயக்கம் போராடுகிறதோ, மக்களுக்காக யார் குரல் கொடுக்கிறார்களோ, அவர்களோடு இணைந்து செயலாற்றுவதே மக்கள் விடுதலைக்கான ஒரே வழி’ என்பதே ஜீவாவின் கொள்கையாக இருந்தது. ‘ஜீவா’ என்பது வெறும் பெயரல்ல... அது தியாகத்தின் அடையாளம்; போராட்டத்தின் வரிவடிவம்; உழைப்பாளர்களின் மந்திரம்; எளிமைப்படுத்தப்பட்ட கம்யூனிஸம்; மொத்தத்தில் ‘தன்னலமற்ற மனிதன்’ என்பதை வலியுறுத்தி, விறுவிறுப்பான நடையில் இந்த நூலை எழுதியிருக்கிறார் சா.இலாகுபாரதி.
Be the first to rate this book.