ஜீபூம்பா சாதனையாளர்களுடைய வாழ்க்கையை நாம் ஒரு பக்கத்திலிருந்து பார்க்கும்போது அவர்களுடைய வெற்றித் தருணங்கள்தான் அடுத்தடுத்துத் தெரிகின்றன. நாமெல்லாம் இப்படி இல்லை, இவர்கள் தனி ரகம் என்று நினைக்கிறோம். ஆனால், இன்னொரு பக்கத்திலிருந்து பார்க்கும்போது தொடக்கக் காலத்தில் அவர்கள் எப்படி இருந்தார்கள் என்பது தெரிகிறது. திடீரென்று சில ஒற்றுமைகள் தெரியத் தொடங்குகின்றன. நாமும் இப்படிதானே இருந்தோம், பிறகு எப்படி அவர்கள் வேறுவிதமாக வளர்ந்திருக்கிறார்கள் என்று யோசிக்கிறோம். இந்தப் புதிருக்கான விடை, இந்த இரண்டு பார்வைகளுக்கும் நடுவில் உள்ள ஒரு மாயத் தருணம். அது கூர்ந்து பார்க்கிறவர்களுக்குதான் புரியும். அந்தத் திருப்புமுனைதான் அவர்களுடைய வாழ்க்கையை மாற்றிப்போட்டிருக்கிறது, முன்னேற்றத்தைக் கொண்டுவந்திருக்கிறது என்பது தெரியும். பல துறைகளைச் சார்ந்த சாதனையாளர்களுடைய வாழ்க்கைகளின் திருப்புமுனைக் கணங்களைக் கதை வடிவில் பதிவு செய்யும் நூல் இது, நம்முடைய வாழ்க்கையில் வரக்கூடிய திருப்புமுனைகளை அடையாளம் காணவும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவும் உதவும்.
Be the first to rate this book.