“தங்களுக்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய நம்பிக்கைத் துரோகம் என்று எதைக் கருதுகிறீர்கள்?” என்று ஜெயலலிதாவிடம் ஒருமுறை கேட்கப்பட்டது. “ஒன்றா, இரண்டா வார்த்தைகளில் சொல்ல...?” என்று அவர் திருப்பிக் கேட்டார்! “பெண்ணாகப் பிறந்தது தவறு என்று நினைக்கிறீர்களா?” என்று கேட்டபோது, “இல்லை... இல்லவே இல்லை!” என்றும் உறுதியாகச் சொன்னார் ஜெயலலிதா! அத்தகைய உள்ள உறுதியின் உருவகம்தான் ஜெயலலிதா! அதுதான் அவரை தமிழக அரசியலில் வலிமையான தலைவர்கள் வரிசையில் இடம்பெற வைத்துள்ளது. அரசியல் தோல்விகளைக் கடந்து வந்து, அழிக்க முடியாத இடத்தைப் பெறுபவர்களைத்தான் தவிர்க்க முடியாத சக்திகளாகச் சொல்ல முடியும். ஜெயலலிதாவும் அப்படிப்பட்டவர்தான்! ஜெயலலிதாவின் அரசியலோடு கருத்து மாறுபாடு உள்ளவர்கள்கூட அவரது துணிச்சல், தளராத முயற்சி, தொடர்ச்சியான போராட்டக் குணம் ஆகிய மூன்றையும் ஒப்புக் கொள்வார்கள். இத்தகைய வரலாற்றுச் செய்திகளுக்கு ஆதாரமானவரின் வரலாற்றுப் புகைப்படத் தொகுப்புதான் இந்தப் புத்தகம். 1948-2011 காலகட்டமான 60 ஆண்டுகளின் சினிமா-அரசியல் நிகழ்வுகளை, ஜெயலலிதாவின் வாழ்க்கை மூலமாகப் பார்க்கும் காட்சிக் கருவூலமாக இந்தப் புகைப்பட ஆல்பம் உருவாக்கப்பட்டுள்ளது. அரசியல் ஆர்வலர்கள், சினிமா ரசிகர்கள், வரலாற்று ஆய்வாளர்கள்... என பலதரப்பட்டவர்களின் கவனத்தை இது ஈர்க்கும் என்ற நம்பிக்கையுடன் வெளியிடுகிறோம்!
Be the first to rate this book.