காளி அம்மன் அதன் இயல்பில் மிகவும் சினம் கொண்ட தெய்வமாகும். அம்மனின் உந்துதல்களைத் தனிக்கும் நிகழ்வுகள் (அலங்காரம், பூசை, பக்தர்கள் திரளாக வந்து வணங்குதல், பலியிடுதல்) கோயில் என்னும் தளத்தில் காப்புக் கட்டுதல் தொடங்கித் திருவிழா முடிய நடைபெறுகின்றன.
மலையாளிகள் புதிய மண்பானையில் மஞ்சள் தடவிப் பொட்டிட்டு அப்பானை புனிதமாக்கப்படுவதுடன் மங்கலமாக்கப்படுகிறது. அப்பானையைத் தலையில் வைத்துக்கொண்டு வீட்டிலிருந்து கோயிலுக்கு எடுத்துச் செல்வர். அப்போது சேவையாட்டம் என்ற ஓர் ஆட்டம் ஆடிக்கொண்டு வருவர். கோயில் அருகே வந்தவுடன் திறந்த வெளியில் கற்களால் அடுப்பு அமைத்து, பானையில் பால் ஊற்றிப் பச்சரிசிப் பொங்கலிடுவர்.
Be the first to rate this book.