சாண்டா ரோசா பள்ளியில் பயின்று வந்த முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு வாசிப்பை அறிமுகம் செய்வதற்காக "வாசிப்பைக் கற்றுத் தருவோம்" என்ற நிகழ்வை ஆரம்பித்தோம். அதன் ஒரு பகுதியாக எளிய சொற்களைக் கொண்ட பிரபலமான சில ஐரோப்பியச் சிறார் கதைகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வழங்கி, அவற்றை வாசித்தபின் பிறருக்குச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டோம்.
அப்போது நாங்கள் எதிர்பாராத வகையில், அவர்கள் தங்கள் கற்பனைகளையும் சேர்த்துச் சொல்லி அக்கதைகளுக்குப் புதிய பரிமாணத்தை அளித்தனர். இப்படியாக இக்கதைத் தொகுப்பை உருவாக்கினோம். அவ்வகையில் இக்கதைகளின் ஆசிரியர்கள் எங்கள் மாணவர்களே. அவர்களுக்கு என் நன்றி.
- இ. லூயி ஸ்மைதி, சாண்டா ரோசா, கலிஃபோர்னியா
Be the first to rate this book.