ஜப்பானிய தேவதைக் கதைகளை ஆங்கிலத்தில் எழுதும்போது உள்ளூர் வாசனையைக் கொண்டுவருவதற்காக அல்லது கதைத்தேவைக்கான விவரிப்புகளுக்காக அல்லது எனக்கு விருப்பமாக இருந்ததால் எனது கற்பனையையும் சேர்த்திருக்கிறேன். ஒன்றிரண்டு இடங்களில் நிகழ்வுகளை வேறு படைப்புகளிலிருந்து பெற்று மாற்றியமைத்திருக்கிறேன். என் நண்பர்களில் வயதானவர், இளைஞர், அமெரிக்கர், ஆங்கிலேயர் எவராயிருந்தாலும் சிலர் ஜப்பானிய மொழியின் அழகிய மரபு மற்றும் புராணக் கதைகளையும் தேவதைக் கதைகளையும் எப்போதுமே மிகுந்த ஆவலுடன் கேட்பதைக் கண்டிருக்கிறேன்.
- எய் தியோடோரோ ஒசாகி
இத்தொகுப்பிலுள்ள அனைத்துக் கதைகளும் கற்பனை வளம் மிக்கவை. அக்கால ஜப்பானிய வாழ்க்கை முறைகள் அழகான முறையில் விவரிக்கப்பட்டுள்ளன. மரக்குடில்கள், அவற்றின் முற்றம், தாழ்வாரங்கள், வைக்கோல் செருப்புகள், அகன்ற தொப்பிகள், தொளதொளத்த சட்டைகள், கிமோனோ ஆடைகள், ஷிண்டோ மரபுக் கோவில்கள், புல் செதுக்கும் கருவி, விசிறிப்படை என்ற போராயுதம், பரிசுகளை வைத்து வழங்குவதற்கான அழகிய வேலைப்பாடுகள் அமைந்த அரக்குப் பெட்டிகள் எனப் பலவும் சொல்லப்பட்டிருக்கின்றன. காடுகள், கடற்கரைகள், கடற்பயணங்கள், கட்சுரா மரங்கள்,பருவ காலங்கள், கதிர், நிலவு, பெர்சிம்மான் பழங்கள், சேக் எனப்படும் அரிசிமது அனைத்தும் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளன. திருமணம், பிரசவம், மரணம் போன்றவற்றின்போது கடைப்பிடிக்கப்படும் சடங்குகள், குழந்தைகளுக்காக நடத்தப்படும் பொம்மைத் திருவிழாக்கள், விருந்துகள் முதலானவும் விவரிக்கப்பட்டுள்ளன.
- ச. ஆறுமுகம்
Be the first to rate this book.