ஐரோப்பா, அமெரிக்கா போலவே ஜப்பானும் விரிவாக எழுதப்பட்ட நிலம். நான் இளைஞனாக இருந்தபோதே தி.ஜானகிராமனின் ஜப்பானியப் பயணக்கட்டுரையான ‘உதயசூரியனின் நாட்டில்’ என்னும் பயணக்கட்டுரையை படித்திருக்கிறேன். அதற்கு அப்பாலும் ஜப்பானைப்பற்றி என்ன சொல்லமுடியும் என்றே தோன்றியது. ஆனால் ஒவ்வொருவரின் அனுபவங்களும் வேறுவேறு. இதில் நம் பார்வைக்குச் சிக்குவதில் ‘கடவுள் அமைத்த’ ஓர் ஒழுங்கு அல்லது தற்செயல் உள்ளது. அது காட்டும் சித்திரம் மிக தனித்தன்மையானது. இந்நூல் ஜப்பானைப்பற்றிய ஒரு மின்கணப் புகைப்படம் என்று சொல்வேன். இதிலும் ஜப்பானிய இலக்கியம், கலை, அரசியல், மதம், வரலாறு பற்றிய சுருக்கமான ஒரு முழுமைச்சித்திரம் உள்ளது.
- ஜெயமோகன்
Be the first to rate this book.