ஒரு நாட்டின் வரலாறு தனி மனிதர்களின் முன்னேற்றத்துக்கு உந்துசக்தியாகத் திகழும் அதிசயம் வரலாற்றில் அபூர்வம். இந்தியா உள்பட உலகின் பல நாடுகளுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு ஜப்பான் ஒரு முன்மாதிரியாக இருந்து வந்திருக்கிறது. எப்படி நிகழ்ந்தது இந்த அதிசயம்? நூற்றாண்டுகால மன்னராட்சியின்கீழ் ஜப்பான் இருந்த நிலை என்ன? மன்னராட்சியில் இருந்து ஜப்பான் மீண்டது எப்படி? ஒரு வல்லரசாகவும் ஆதிக்கச் சக்தியாகவும் ஜப்பான் திகழ்ந்த கதை தெரியுமா? இரண்டாம் உலகப் போரில் ஹிரோஷிமாவும் நாகசாகியும் அணுகுண்டுகளால் சாம்பலாக்கப்பட்டபோது ஒரு ஃபீனிக்ஸ் பறவை போல் ஜப்பான் மீண்டெழுந்து தன்னைப் புனரமைத்துக்கொண்டது எப்படி? துண்டிக்கப்பட்ட ஒரு சிறு தீவாக இருந்த ஜப்பான் உலக வர்த்தகச் சந்தையில் ஆளுமை செலுத்தும் அளவுக்கு வளர்ந்தது எப்படி? தொழில்நுட்ப உலகில் தனி முத்திரை பதித்தது எப்படி? ஜப்பானின் இன்றைய நிலை என்ன? இந்நாடு எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன? தொடக்ககாலம் முதல் இன்றைய தேதி வரையிலான ஜப்பானின் வரலாற்றை இதைவிட எளிமையாகவும் சுவையாகவும் அறிமுகப்படுத்திவிடமுடியாது.
Be the first to rate this book.