விளையாட்டுப் பருவத்தில் சிறுமி ஒருத்தியின் ஆசை என்னவாக இருக்கும்? பூக்கள் பறிப்பது, பட்டாம்பூச்சி பிடிப்பது. ஆனால் சிறுமி மனுவுக்கு பொம்மைகளைவிட போர் செய்ய உதவும் ஆயுதங்களே பிடித்திருக்கின்றன. ஜான்சியின் வயதான மன்னர் கங்காதரனுக்கு மனைவியான மனு, லட்சுமி பாய் ஆனார். நீண்ட நாள்கள் கழித்து பிறந்த குழந்தையும் இறந்துபோனது. கங்காதரனும் இறந்துபோனார். ஆங்கிலேயர்கள் ஜான்சியைக் கைப்பற்ற நாக்கைச் சுழற்றிக் கொண்டுவந்தார்கள். அந்த நொடியில் லட்சுமி பாயின் கரங்களில் வாள் சுழல ஆரம்பித்தது. ஜான்சியை இழந்துவிடாமல் இருக்க அவர் செய்த போராட்டங்கள் ஒவ்வொன்றும் வலி நிறைந்தவை. புரட்சிப் பெண் லட்சுமி பாயின் வாழ்க்கையைப் படிக்கும்போது, துணிச்சலுக்கான அர்த்தத்தை முழுமையாக உணரலாம்.
Be the first to rate this book.