'பீட்சா', 'ஜிகர்தண்டா' போன்ற திரைப்படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜின் 'இறைவி' திரைப்படம் இந்நாவலை பகுதியளவு தழுவி எடுக்கப்பட்டது.
குற்றவாளியாக சிறைக்குச் சென்றுவிட்டுத் திரும்பும் ஒருவன், தண்டனை முடிந்து வெளிவந்ததும் தனது குடும்பத்தைத் தேடிக் கண்டுபிடிக்கிறான். அலட்சியம் காட்டும் மனைவி, பயந்து அலறும் குழந்தை, மீண்டும் பழைய குற்றத் தொழிலுக்கு அழைப்பு விடும் தோழர்கள். இவர்கள் மத்தியில் குற்ற உணர்வும், திருந்தி வாழும் ஆசையுமாக புறக்கணிக்கும் உலகத்துடன் அவன் நடத்தும் போராட்டமே கதை. விறுவிறுப்பாகச் செல்லும் இக்கதை ‘சிறைச்சாலை உண்மையிலேயே ஒரு குற்றவாளியைத் திருத்துகிறதா?’ என்கிற கேள்வியையும் அழுத்தமாக முன் வைக்கிறது.
Be the first to rate this book.