ஜனநாயகத்தைவிட அதிகம் பயன்படுத்தப்பட்ட, தவறாகவும் பயன்படுத்தப்பட்ட மற்றொரு அரசியல் சித்தாந்தம் ஏதுமில்லை. தற்போது, கிட்டத்தட்ட எல்லா ஆட்சிகளுமே தாங்கள், ஜனநாயக ரீதியிலானவை என்று உரிமை கொண்டாடுகின்றன. ஆயினும் எல்லா ‘ஜனநாயகங்களும்’ சுதந்திரமான அரசியல் என்ற வழக்க மெல்லாம் முழு ஜனநாயகக் குடியுரிமைகளுக்கு முன்னதாகவே வந்தவை.
இந்நூல், பழங்கால கிரேக்கம் மற்றும் ரோமாபுரியிலிருந்து, அமெரிக்க, பிரஞ்சு மற்றும் ரஷியப் புரட்சிகள் வரையிலும் ஜனநாயகத்தின் தத்துவம், நடைமுறைகள் மற்றும் அமைப்புக்கள் பற்றியும், தற்கால உலகில் அதன் வகைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றியுமான வரலாற்றின் ஒரு சுருக்கம். நல்ல ஆட்சி என்பதற்கு ஜனநாயகம் தேவையானதுதான் என்றாலும் அதுவே நல்ல ஆட்சியை உறுதிசெய்வதற்குப் போதுமானதல்ல என்று இந்நூல் வாதிடுகிறது. சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள் போன்ற கருத்துக்களும், சமுதாயத்தின் உள்ளேயுள்ள குழுக்கள் தங்களின் உரிமைகளாகக் கோருபவை, அவற்றின் சுதந்திரங்கள் ஆகியனவும் ஜனநாயகத்தில் பெரும்பான்மைகளின் விழைவுகளைக் கட்டுப் படுத்த அனுமதிக்கப்பட வேண்டுமென்றும் இந்நூல் வாதிடுகிறது.
Be the first to rate this book.