வகுப்பறைக்குள் அமர்ந்து அல்ல வகுப்பறையைவிட்டு வெளியே வந்து கல்வி கற்க ஆரம்பித்தார் ஜேம்ஸ் வாட். பாடம், பரீட்சை, மதிப்பெண்கள் எதிலும் கவனம் இல்லை. விழித்திருக்கும்போதும் சரி உறங்கும்போதும் சரி இயந்திரங்களைப் பற்றி மட்டுமே கனவு கண்டுகொண்டிருந்தார் ஜேம்ஸ்.
பிரகாசமான கனவு அது. மனிதர்களுக்குப் பயன்படும் வகையில் இயந்திரங்களின் செயல்திறனை அதிகரிக்கவேண்டும். மக்களுக்குப் பயன்படும் கருவிகளைக் கண்டுபிடிக்கவேண்டும். நீராவி எஞ்சினின் மீது ஜேம்ஸின் கவனம் திரும்பியது. இதன் திறனை அதிகப்படுத்தினால் என்ன? இடைவிடாத உழைப்பால் அந்தக் கனவு நிறைவேறியது. துணி ஆலை, சுரங்கம், கப்பல், ரயில் என எங்கும் நீராவி இயந்திரம் தன் ஆட்சியைச் செலுத்த ஆரம்பித்தது.
ஜேம்ஸ் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருந்தார். துணி காய வைக்கும் இயந்திரம், விஷக் காற்றைப் பிரித்தெடுக்கும் கருவி,சிற்பங்களை மறு உருவாக்கம் செய்யும் கருவி என்று நீள்கிறது அவர் கண்டுபிடிப்புகளின் பட்டியல். இத்தனைக் கண்டுபிடிப்புகளுக்கும் பின்னால் இருந்த சாதனையாளரின் கதை இது.
Be the first to rate this book.