நம் நாடு விடுதலை பெறுவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு நாட்டின் வெவ்வேறு இடங்களில் ஜமாஅத்தே இஸ்லாமி நடத்திய மாநாடுகளின் நிகழ்ச்சிப் பதிவுகளை விவரிக்கின்ற நூல்தான் இந்நூல்.
விடுதலை வேட்கையும் மக்கள் போராட்டங்களும் உச்சக்கட்டத்தை அடைந்து விட்டிருக்க, அவற்றோடு அரசியல் ஆதாயங்களுக்காக இந்துக்கள் என்றும், முஸ்லிம்கள் என்றும் மக்களை பிளவுபடுத்தி அரங்கேற்றப்பட்டு வந்த வெறுப்பரசியலின் தீய நாக்குகள் ஒட்டுமொத்த தேசத்தையும் பொசுக்கிக் கொண்டிருந்த, தினம் தினம் கலவரம், நித்தம் நித்தம் கொலை, கொள்ளை, சூறையாடல் என மதவாத வெறுப்பும் நெருப்பும் பேயாட்டம் போட்டுக் கொண்டிருந்த கொந்தளிப்பான நாள்களில் இராஜஸ்தான், மதராஸ், பீகார் என வெவ்வேறு பகுதிகளில் நடந்த மாநாடுகள்தாம் அவை.
இயக்கத் தலைவர்களின் எழுச்சியுரைகள், இயக்க ஊழியர்களின் பரிந்துரைகள், அன்றையக் காலத்துச் சூழலைப் படம்பிடித்துக் காட்டுகின்ற தகவல்கள், செயல் அறிக்கைகள் மீதான கருத்-துரைகள் என இந்த மாநாடுகள் பற்றிய விவரங்களை நம் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்திவிடுகின்றது இந்த நூல்.
Be the first to rate this book.