தமிழ்ச் சமூகத்தில் நிகழும் சமகால மக்கள் போராட்டங்கள் குறித்து உடனுக்குடன் நூல்கள் வெளியாவது ஆரோக்கியமானதொரு அணுகுமுறை. சென்னை பெருமழை வெள்ளம், பணமதிப்பு நீக்கம் போன்றவற்றைப் பற்றிப் பல நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த மரபின் தொடர்ச்சியாக, ஜல்லிக்கட்டுப் போராட்டம் குறித்தும் நூல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. கடந்த ஜனவரியில் சென்னை மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான இளைஞர்களின் தன்னெழுச்சியான போராட்டம், தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல; இந்தியாவுக்கே பல செய்திகளைச் சொல்லியிருக்கிறது.
ஜல்லிக்கட்டுப் போராட்டம் குறித்த பலரின் பன்முகப்பட்ட பார்வைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டும் தமிழர் பண்பாடும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டம், மக்கள் எழுச்சியின் மறுபக்கம், டெல்லிக்கட்டு, ஜல்லிக்கட்டு: சாதித்ததும் இழந்ததும், ஜல்லிக்கட்டுப் போராட்டமும் முஸ்லிம்கள் பங்கேற்பும் உள்ளிட்ட தலைப்புகளில் 16 ஆளுமையாளர்களின் கட்டுரைகள் விரிவான வாசிப்புத் தளத்துக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன. வெட்டவெளியில் வெறும் வாய்ச்சொல் பேசி வம்பளக்காமல், இப்பிரதி ஒன்றின் துணையோடு கருத்துரீதியாக விவாதிக்கவும், உடன்படவும், மாறுபடவும் என அனைத்துக்குமான திறவுகோலோடு எழுதப்பட்டுள்ள சமூக அக்கறை மிக்க கட்டுரைகளின் தேர்ந்த தொகுப்பு.
Be the first to rate this book.