ஆசியாவின் நம்பர் ஒன் ஆக்ஷன் ஹீரோ. உலகம் முழுவதும் லட்சக்கணக்கில் ரசிகர்கள். பல் முளைக்காத குழந்தைகள் முதல் பாட்டி, தாத்தா வரை அனைவரையும் சுண்டி இழுக்கும் ஆற்றல். எப்படிச் சாத்தியமானது இந்த அதிசயம்? ரப்பர் போல் வளைந்து நெளிந்து அவர் திரையில் நிகழ்த்தும் அற்புதங்கள் ரசிகர்களுக்கு அதற்கு முன்னால் பரிச்சயமாகாதவை. முறைப்படி பயிற்சிகள் எடுத்துக்கொண்டு சீராகத் திட்டம் வகுத்து, அட்டவணை போட்டுக்கொண்டு முன்னேறிக் காட்டியவர் ஜாக்கி சான். ஒரு ஆக்ஷன் ஹீரோவாக மட்டுமே நமக்கு அறிமுகம் ஆகியிருக்கும் ஜாக்கி சானை ஒரு மகத்தான சாதனையாளராக அறிமுகப்படுத்துகிறது இந்நூல்.
Be the first to rate this book.