குடிமை உரிமை / மனித உரிமை அமைப்புகள் எனத் தமிழ்நாட்டில் செயல்படும் எந்த அமைப்புடனும் ஜெயராணி தன்னை இணைத்துக்கொள்ளவில்லை என்றாலும் அவற்றின் கருத்துநிலை, நடைமுறைத் தளங்களைவிட விரிவானதும் வீச்எல்லைகள் கொண்டவையுமான பிரச்சனைகள் புலனாய்வு இதழியாளராக, மனித உரிமை ஆர்வலராக, தலித்திய எழுத்தாளராக, பெண்ணிலைவாதியாகத் தன்னை நிறுவிக் கொள்கிறார் தனது எழுத்துக்கள் மூலம். அம்பேத்கரின் உலகளாவிய மனிதநேயப் பார்வையும் பெரியாரின் சாதி ஒழிப்பு, ஆணாதிக்க எதிர்ப்பு மூடநம்பிக்கை எதிர்ப்புப் பகுத்தறிவுப் பார்வையும் - ஜெயராணி விடயங்களை பார்க்கும் புரிந்துகொள்ளும் கோணத்தை வடிவமைக்கின்றன.
- எஸ். வி. ராஜதுரை
Be the first to rate this book.