சாதி ஒழிப்பு என்கிற மய்ய ஊற்றின் கிளை ஆறுகளாய் வாசிக்கும் மனங்களை நோக்கி வெள்ளமெனப் பாய்கின்றன ஜெயராணியின் இக்கட்டுரைகள். தொல்குடிதலித் மக்களின் மனித மாண்பை மீட்டெடுப்பதற்கான வாழ்வியலை எதிரொலிக்கும் ஜெயராணியின் எழுத்து – தலித் இதழியல் வரலாற்றில் – தலித் பெண் இதழியலாளர் என்ற வகைமாதிரியின் தலை எழுத்தாய் மிளிர்கிறது ‘ஜாதியற்றவளின் குரல்’ புத்தகம். தலித்தியம், பெண்ணியம், மனிதஉரிமை, விளையாட்டு, மதமாற்றம், பிரதிவாசிப்பின் திறனாய்வு என்கிற நவீன விமர்சனங்களின் அத்தனை வடிவங்களிலும் தலித்திய ஓர்மையோடு ‘தலித் முரசு’ன் வழியில் இயங்கிப் பார்த்திருக்கும் எழுத்து மட்டுமல்ல உட்சாதியில் ஆதிக்கங்களை, ஒடுக்குமுறைகளை ஒழிக்கப் போராடி அவதூறுகளை சந்தித்த எழுத்து தோழர் ஜெயராணியின் எழுத்து.
Be the first to rate this book.