ஜாதி குறித்த பெரியாரின் எழுத்துகள், சொற்பொழிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள் இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
"ஜாதி நிலைநிறுத்தப்படுவதற்கு நம் நாட்டில் முக்கிய காரணம், ஜாதியானது தொழிலோடு இணைக்கப்பட்டதாலேயே ஆகும். பரம்பரை பரம்பரையாக அந்தந்த ஜாதியைச் சேர்ந்தவன் அந்தந்த ஜாதிக்கு என்று ஏற்பாடு செய்யப்பட்ட அந்தந்தத் தொழிலைச் செய்து வந்ததால், ஜாதியானது நிலைநிறுத்தப்பட்டு வருகின்றது."
இதன் காரணமாகத்தான் ஜாதி காப்பாற்றப்பட வேண்டுமென்பதால்தான் பள்ளிக்கூடம் வைக்காமல் இருந்தனர்.
"ஜாதி ஒழிய வேண்டும். நாடு சுதந்திரம் அடைய வேண்டும், காட்டுமிராண்டித்தன்மை மாறி அறிவாளி மக்களாக ஆக்கப்பட வேண்டும் என்ற கொள்கைகளை முன் வைத்து யார் பாடுபட்டாலும் அவர்களை ஆதரிப்பது என் கடமை."
"ஜாதி ஒழிய வேண்டும் என்பதற்காக இந்த நாட்டில் ஒருவரும் தோன்றவில்லையே. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சித்தார்த்தர் என்ற புத்தியடைந்தவர் தோன்றினார். அந்த ஒரு மனிதர் இருக்கிறாரே தவிர, வேறு ஒருவரும் இல்லையே."
இவை போன்ற ஜாதி குறித்த பெரியாரின் கருத்துகள், ஜாதி ஒழிப்பிற்காக அவர் நடத்திய போராட்டங்கள், அதனால் சமூகத்தில் நிகழ்ந்த மாற்றங்கள் என பல தகவல்கள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. இந்த நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ள கருத்துகள் எந்தச் சூழ்நிலையில் கூறப்பட்டன என்ற தகவல்களையும் இணைத்துக் கொடுத்திருந்தால், இன்னும் பயனுள்ளதாக இருந்திருக்கும்.
Be the first to rate this book.