துருக்கியின் முக்கியமான சமகால எழுத்தாளர்களில் ஒருவரும் இந்தியா, நேபாளம், பூடான் ஆகிய நாடுகளுக்கான துருக்கி தூதராகத் தற்போது பணியாற்றிவருபவருமான ஃபிராத் சுனேலின் இரண்டாவது நாவல் இது.
-
“வருத்தமும் வியப்பும் அதிர்ச்சியும் பிரகாசமும் நிறைந்த ஃபிராத் சுனெலின் இஸ்மிர்லி எனது இறுதிக் காதல், நிச்சயமாய் உங்களுக்குள் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கதையாகும். மனித மனதுக்குள் இருக்கும் சில இருண்ட அம்சங்களைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்தி இது உங்களைத் திடுக்கிட வைக்கும். முரணாக - இந்த இருண்ட அம்சங்கள் இன்றி மனித வாழ்க்கையே இல்லை. வாசிக்கத் தவறாதீர்கள்.” -சசி தரூர்
“ஃபிராத் சுனெல் ஓர் அற்புதமான கதைசொல்லி. ஆழமான, அழுத்தமான, மர்மம் நிறைந்த இந்த உளவியல் நாடகம், அன்பின் சிக்கல்களாலும் மறதியின் துரோகத்தினாலும் கட்டுண்டு கிடக்கும் ஒரு கதையைச் சொல்லிச் செல்கிறது.” -நமிதா கோகலே, எழுத்தாளர்: ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழாவின் இணை இயக்குநர்
“இஸ்மிர்லி, எனது இறுதிக் காதல் காதல், இழப்பு, குடும்பப் பிணைப்புகளில் சிக்கல்கள் ஆகியவை குறித்து ஆராயும் ஒரு உளவியல் நாவல், தூதர் ஃபிராத் சுனெல் அழகான காதலுக்கும் வலி நிறைந்த பிரிவுக்கும் இடையில் நகரும் ஒரு கதையைச் செதுக்கியுள்ளார். இது உறுதியற்ற வாழ்வில் நம்மை இறுக்கிப் பிடிக்கும் உறவுகளின் வலிமையைக் குறித்து மீண்டும் ஒருமுறை நமக்கு நினைவூட்டுகிறது.” - விகாஸ் ஸ்வரூப், ‘Q & A’ நாவலின் ஆசிரியர், இதைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படமான ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ எட்டு ஆஸ்கர் விருதுகளை வென்றது.
Be the first to rate this book.