ஷேர் மார்க்கெட்டில் லட்சம் லட்சமாகப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? தவறில்லை. ஆனால் நஷ்டத்தைத் தவிர்க்கும் சூட்சுமங்களும் தெரிந்திருக்க வேண்டும்.
ஷேர் மார்க்கெட் என்பது சமீப காலமாக அபரிமிதமான வளர்ச்சியடைந்திருக்கும் துறை. லட்சக்கணக்கான மக்கள் ஆர்வமுடன் இதில் முதலீடு செய்கிறார்கள். இது குறித்த விவரங்களை அறிந்துகொள்வதில் ஆர்வம் செலுத்துகிறார்கள்.
நல்ல விஷயம்தான். ஆனால், அதில் பணத்தைப் போடுகிறவர்கள் எல்லோரும் நிறைய லாபம் சம்பாதிக்கிறார்களா?
விஷயம் தெரிந்த சிலர் நிறைய சம்பாதிக்கத்தான் செய்கிறார்கள். அது பற்றி எதுவும் தெரிந்து கொள்ளாமல் அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி வருபவர்கள் பரிதாபகரமாகக் கையைச் சுட்டுக் கொள்கிறார்கள்.
இந்தப் புத்தகம், ஷேர் மார்க்கெட்டில் நஷ்டத்தை அறவே தவிர்த்து, லாபத்தைப் பெருக்க வழி சொல்கிறது. ஷேர் மார்க்கெட் தொடர்பான அத்தனை நுணுக்கங்களையும் எளிமையாகப் புரிய வைக்கிறது.
பங்குச்சந்தை பற்றி ஓரளவுக்கு அடிப்படை தெரிந்தவர்கள், இன்னும் ஆழமாகப் புரிந்துகொண்டு,படுகுழிகளில் விழுந்து நஷ்டம் அடையாமல் இருக்க இந்தப் புத்தகம் நிச்சயம் உதவும்.
Be the first to rate this book.