வசந்த காலம் எப்போது தொடங்கும், மழை என்று வரும், காற்று எத்திசையில் அடிக்கும், விதைக்கலாமா, அறுவடை செய்துவிட ஏற்ற காலமா, தானியங்களைப் பதப்படுத்த உகந்த காலமா என எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்க நம் மூத்த தலைமுறையிடம் ஒரு கணக்கு இருந்தது. அதுவே இயற்கையின் நெடுங்கணக்கு. இயற்கையிடம் தான் பெற்ற அனுபவத்திலிருந்து மனிதன் யாவற்றையும் சரியாகக் கணிக்கப் படித்தான். இந்த மண் விவசாயத்திற்கு உகந்ததா, வானிலை பயணத்திற்கு ஏற்றதா என அனுபவங்களின் மூலம் அவன் கண்டடைந்ததை இன்று நாம் அறிவியல்பூர்வமாக அறிகிறோம். அனுபத்திலிருந்து அறிவியலுக்கான மனிதனின் பயணத்தை இந்த நூல் நம்மிடையே பேசுகின்றது.
Be the first to rate this book.