பசுமைப் புரட்சியின் அலங்கோலத்தால் வீரிய ரக விதை, ரசாயன நச்சு உரம், உயிர்க் கொல்லி பூச்சி மருந்து முதலியவை ஏற்படுத்திய விஷப் பரவலானது மண், மனிதன், பறவை, விலங்கினம் என நமது பூவுலகின் உயிர்ச்சூழலயே நோய்க்கு ஆளாக்கி நம்மை மீள முடியாத நிலைக்குத் தள்ளி விட்டது.
மனித இனத்திற்கு மரபணு மாற்றப் பயிரிலிருந்து பெறப்படும் உணவினால் விளையக்கூடிய தீங்கான விளைவுகள் குறித்து இது நாள் வரை அறிக்கைகள் வெளிவராதபடி அரசுகள் தீவிரமாக திரையிட்டு மூடிவந்துள்ளன.
உணவு இறையாண்மை என்பது நமது வாழ்வாதாரம் மற்றும் ஆரோக்கியத்தின் மீதான இறையாண்மை ஆகும்.
நமது பாரம்பரிய வேளாண் அறிவுச் செல்வங்களைத் தமதாக்கிக் கொள்ள முனையும் வெளிநாட்டுக் காப்புரிமைக்கு எதிரான தாக்குதலை ஒவ்வொரு விவசாயியும் மேற்கொள்ள வேண்டிய தருணம் இது.
Be the first to rate this book.