‘இயற்கை மதம்’ என்னும் அதன் பெயருக்கேற்ப, இஸ்லாமிய மதக்கொள்கைகள் இயற்கைத்தன்மைக்கு முற்றிலும் பொருந்தியவை என்பதை அதன் ஆசிரியர் அதில் தெளிவுபட விளக்கிக் காட்டியிருப்பதுடன், இஸ்லாமிய மதச்சட்டங்கள் அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும் பொருத்தமானவை, அனுபவ சாத்தியமானவை, எந்நாட்டிலும் உள்ளவர்கள் எளிதில் அனுசரிக்கக் கூடியவை என்பதாகவும் விளக்கிக் காட்டுகின்றார். … இந்நூல் இந்து மக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என்ற சமய வித்தியாசமின்றி அனைவரும் வாங்கி வாசித்துப் பார்க்க வேண்டியதொரு நூலாகும்’.
- ஈ. வெ. ரா. பெரியார்
முதன் முதலாக திருமறையை எளிய தமிழில் மொழிபெயர்த்து அதன் போதனைகள் முறையான மார்க்கக் கல்வி பெறாத சாதாரண தமிழ் முஸ்லிம்களையும் சென்றடையச் செய்த இந்த மார்க்க அறிஞருக்கு தமிழ் முஸ்லிம் சமுதாயம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல.
இந்தப் பெரியார் எழுதிய பிற நூற்களுள் ஒன்றே இந்த ‘இயற்கை மதம்’. சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட இந்நூல் இஸ்லாமின் ஆன்மிக நம்பிக்கைகளை விளக்குவதுடன், இஸ்லாம் போதிக்கும் அரசியல், பொருளாதாரம், வாழ்வியல் போன்றவற்றை விமரிசிப்பவர்களுக்கும் தக்க பதிலளிக்கிறது. பிற சமூகங்களில் வழக்கத்திலுள்ள தீண்டாமை, பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் ஆகியவற்றை கடுமையாக சாடும் இந்நூல், இத்தகைய சமூக கொடுமைகளுக்கு இஸ்லாம் எப்படி தீர்வளிக்கிறது என்பதைப் பற்றியும் ஆணித்தரமான வாதங்களை முன் வைக்கிறது. இரட்டைத் தம்ளர் முறை இன்றளவும் பரவலாக கடைப்பிடிக்கப்பட்டுவரும் சூழ்நிலையில், இந்நூலின் கருத்துக்கள் இன்றைய காலக்கட்டத்திற்கும் பொருந்திப்போவது ஆச்சரியமான ஒன்றல்ல.
Be the first to rate this book.