சுதந்திரத்திற்குப் பிறகு அதிகரித்த அதிகாரவர்க்கம் மற்றும் சந்தர்ப்பவாதிகள் பொய்ப்புகழ்ச்சி, அராஜகம் அரசியல் ஊழல்கள் போன்ற நிகழ்வுகளைக் களமாகக் கொண்ட இந்நாவல் கேரள பண்பாட்டு வண்ணங்களைக் தீட்டுகிறது. இயல்பான மொழியாக்கம் நாவலுக்கு சுவை கூட்டியுள்ளது.
'இயந்திரம்' புகழ்பெற்ற மலையாள நாவலின் மொழியாக்கம். இந்த நாவலில் கேரள மக்கள் வாழ்க்கையின் ஓர் அத்தியாயம். சுதந்திரத்துக்குப் பிறகு சமூகத்தில் சந்தர்ப்பவாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தினரின் அதிக எண்ணிக்கை, பொய்ப்புகழ்ச்சி, அராஜகம், மற்றும் அரசியல் ஊழல்களில் ஆழ்ந்தவர்களின் இழிசெயல்கள், நேர்மையான அதிகாரிகளின் அவலநிலை, அதிகாரிகளின் கெட்ட எண்ணங்கள், நாளுக்குநாள் புனிதம் கெட்டுப்போய்க் கொண்டிருக்கும் மனப்போக்கு... இத்தகைய கூறுகள் இங்கே நுணுக்கமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. ஐ. ஏ. எஸ். முடித்து பணிப் பயிற்சியிலிருந்து தொடங்கி, அவரது நியமனம், திருமணம், குழந்தைகள் பிறப்பு, வம்ச பரம்பரை பண்புகளைப் போற்றும் மரபு, வழிதவறுதல், காரோட்டியாக இருந்த தகப்பனை மறக்கும் ஐ. ஏ. எஸ்ஸின் போக்கு இவற்றையெல்லாம் சித்தரிக்கையில் நாவலாசிரியர் ஒவ்வொரு இடத்திலும் கேரளத்தின் சமூக பயன்பாட்டு வண்ணங்களைத் தீட்டும் வாய்ப்பை நன்கு பயன்படுத்துகிறார். சுருக்கமாக இந்த நாவல், வரலாற்று வீச்சை எட்டிப்பிடிக்கும் ஒரு உன்னதப் படைப்பு.
நூலாசிரியர் மலையாற்றூர் ராமகிருஷ்ணன் (1927-1998) மலையாள படைப்பாளி, ஓவியர், சமூகநலத் தொண்டர், கேலிச்சித்திரக்காரர் எனப் பெயர் பெற்றவர். பன்முகத்திறன் பெற்ற இந்த படைப்பாளி, 1981-ல் இந்திய ஆட்சிப் பணித்துறையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று முழுநேரம் இலக்கியப் பணியில் ஈடுபடலானார். இலக்கியம் படைத்தது மட்டுமல்ல, இலக்கியத்தை வாழ்ந்து காட்டிய மிகச்சிலரில் ஒருவர். 200 சிறுகதைகளின் ஆசிரியர். இவை தவிர, நையாண்டியும் எழுதினார். திரைப்படக் கதைகளும் எழுதினர். இவரது முக்கியப் படைப்புகளில் வேர்கள், யட்சி, பொன்னி, துவந்த யுத்தம், வேழாம்பல் ஆகியவை தலைசிறந்தவை.
Be the first to rate this book.