அறிவும் அழகும் கொண்டு சுதந்திரப் பறவையாக வாழ நினைப்பவள் ரம்யா. கட்டுப்பாடு என்பது அவள் அகராதியிலேயே கிடையாது. எங்கும் எதிலும் புகுந்து வெற்றியோடு வர என்னால் முடியும் என்று உயிர்ப்போடு இருப்பவள். தொலைக்காட்சி சேனல் ஒன்றில் பணி அவளுக்கு. மண்ணில் விழும்போதே கண்மூடி, மண்ணுக்குள்ளேயே புதையுண்டு போன தன் அண்ணனை அவன் ஆன்மாவை அவன் உயிர்த்துடிப்பைக் காத்துக்கொண்டு இருப்பவர் ஐயனார் என்று முழுமனதோடு நினைப்பவள் ரம்யா. தன் வாழ்வின் திருப்புமுனைகளில் நிற்கும்போதெல்லாம் அந்த முகம் தெரியாத அண்ணனும், ஐயனாருமே தன்னை வழி நடத்துவார்கள் என்ற தீவிரமான உணர்வு கொண்டவள்.
Be the first to rate this book.