வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கிற உலகம் இது. ஆனாலும்... கிடைக்கிற இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு வாழ்வில் வளம் பெறுபவர்கள் ஒரு சிலரே.அவர்களும் குறைந்த அளவிற்கே பயன்பெறுகிறார்கள். இதற்கு என்ன காரணம்?
காரணங்கள் வெளியிலா இருக்கின்றன! இல்லவே இல்லை. அவை நம் உள்ளுக்குள்ளேதான் உறைந்து கிடக்கின்றன. அதனால்தான் நம்மை நாமே சரி செய்துக்கொள்வது இங்கே அவசியமாகிறது. அனால் இதை நமக்கு இத்தனை வலுவாக, ஆதாரப்பூர்வமாக, எளிமையாக உணர்த்த முடியுமா என்று வியக்க வைக்கிறது இந்தப் புத்தகம்.
நாம் இப்போது செய்துக்கொண்டிருப்பதைக் காட்டிலும் கூடுதலாக எவ்வளவோ நம்மால் செய்ய முடியும் என்று நமக்குத் தோன்றச் செய்வதும், கண்டிப்பாகச் சிறப்பாக ஏதாவது செய்யவேண்டும் என்று நம்மைத் தீர்மானிக்க வைப்பதும் இந்தப் புத்தகத்தின் சிறப்பு.
படிப்பு, குடும்பப் பின்புலம், உடல் வலு, இருக்குமிடம் போன்ற எதுவுமே சாதனைகள் செய்வதர்க்குத் தடையில்லை. எல்லோராலும் சாதிக்க முடியும். அவர்கள் இதற்காக மனது வைத்தால், முயற்சித்தால் மட்டும் போதும் என்று அழுத்தம் திருத்தமாகப் பிட்டு பிட்டு வைக்கிறார் புத்தகத்தின் ஆசிரியர் சோம வள்ளியப்பன்.
Be the first to rate this book.