லெனின் பற்றி சோவியத் எழுத்தாளர்கள் மற்றும் அவரது சமகாலத்து தொழிலாளர்கள் எழுதிய கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. இது பழைய மாஸ்கோ வெளியீட்டின் மறுவெளியீடு ஆகும்.
இந்த படைப்பை ஆக்கியோர் சிறந்த சோவியத் எழுத்தாழர்களும் கட்டுரையாளர்களும் ஆவர். அவர்களில் பலர் வி.இ. லெனினை நேரில் அறிந்தவர்கள். வி.இ. லெனினது நெருங்கிய நண்பர் மக்ஸீம் கார்க்கியின் பிரசித்திபெற்ற நினைவுக்குறிப்புகள். பிரபல சோவியத் எழுத்தாளர்கள் அ.பேக், யெ.திராப்கினா, ஸெ.அன்தொனவ், இ.அராமிலெவ், அகாதமிஷியன் போன்ச்-புருயேவிச் ஆகியோரின் கதைகள் இந்த தொகுப்பில் அடங்கியுள்ளன. வி.இ. லெனினது சமகாலத்தவர்களான தொழிலாளர்களின் நினைவுக் குறிப்புகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இவர்கள், புரட்சி ஆண்டுகளில் லெனினை சந்தித்தவர்கள்.
தொகுப்பின் ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் வாசகர்கள் முன் தோன்றகிறார் உயிர்த் துடிப்புள்ள லெனின் - அக்டோபர் புரட்சியின் பெருந்தலைவர், கவர்ச்சியும் வியப்பூட்டும் அடக்கமும் கொண்ட மாமனிதர்.
Be the first to rate this book.