தொல் திருமாவளவன், பேராசிரியர் அ.மார்க்ஸ்,
கவிஞர் ஈரோடு தமிழன்பன், தமிழருவி மணியன்,
பீட்டர் அல்போன்ஸ், லேனா தமிழ்வாணன், திருச்சி சிவா, சிலம்பொலி செல்லப்பன், கம்பம் செல்வேந்திரன் ஆகிய ஒன்பது ஆளுமைகள் நபி(ஸல்) அவர்களைக் குறித்து விரிவாகப் பேசியிருக்கின்றார்கள். ஒருவரின் கருத்தை ஒருவர் சொல்லவில்லை. ஒரேசெய்தி எங்குமே மீண்டும் மீண்டும் வரவில்லை. நபி(ஸல்) என்ற ஞானப் பெருங்கடலிலிருந்து எவ்வளவு செய்திகளையும் அள்ளிக்கொணரலாம் என்பதை இந்நூல் உணர்த்துகிறது. அள்ள அள்ள புதிதாய் சுரந்துபொங்கும் ஊற்றுப்போல செய்திகள் பெருகுகின்றன.
இந்த ஆளுமைகள் அண்ணலாரைப் பார்த்த பார்வை பெருமானாரின் மீதான பெருமதிப்பை நம்முள் பெருக்கெடுக்கச் செய்கிறது. அண்ணல் நபி(ஸல்) அவர்களைச் சொல்லச் சொல்லச் சொல் இனிக்கும். கேட்கும் செவி குளிரும். இதயம் நனைய கண்கள் பனிக்கும்.
இந்த நூலை வாசிக்கும் ஒவ்வொரு வாசகரின் மனதிலும் நபி(ஸல்) அவர்களைக் குறித்த மதிப்பீடு கோடி மடங்கு உயரும். பேரன்பு பெருக்கெடுக்கும். எண்ணி எண்ணி வியக்கத் தோன்றும்.
ஏராளமான வாழ்வியல் உதாரணங்கள் அண்ணலாரின் வாழ்வு முழுவதும் கொட்டிக்கிடக்கிறது. அந்த வகையில் இது வாசிப்பதற்கான நூல் மட்டுமல்ல; வாழ்க்கைக்கான நூலும்கூட.
Be the first to rate this book.