நிலவில் கால் வைத்த,நீல் ஆம்ஸ்ட்ராங், பாங்கு சப்தத்தைக் கேட்டாரா இல்லையா என்று விவாதித்த முஸ்லீம் சமூகம், அதே நிலவில், 24 இடங்களுக்கு முஸ்லீம் அறிவியலாளர்களின் பெயர்களை, அறிவியல் உலகம் ஏன் சூட்டியுள்ளது என விவாதிக்க மறந்து விட்டது.
நமக்கெல்லாம், அறிவியலாளர்கள் நியூட்டனைத் தெரியும், கலீலியோவைத் தெரியும். ஆனால், அறிவியலாளர் அல் கய்தமை பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை.
உலகிற்கு, கேமராவும், காப்பியும், சோப்பும், காகிதமும் எப்படி வந்தது என்று எளிய நடையில் சொல்லும் ஒரு இயல்பான புத்தகமே,
‘ இவர்கள் இல்லாமல் ’
விஞ்ஞானிகள் என்ன கண்டுபிடித்தார்கள் என்று படித்திருப்போம். கண்டுபிடிப்புகளின் வழியாக விஞ்ஞானிகளை அறிமுகப்படுத்தும் ஓர் புதிய அணுகுமுறை இது.
இப்புத்தகத்தை படித்து முடிக்கும் போது, பல ஆச்சர்யங்கள் நம் கண் முன் வந்து செல்வதை வாசகர்கள் நிச்சயம் உணரலாம்..
Be the first to rate this book.