இதுவரை மூன்றே திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இருந்தாலும் இளைய தலைமுறை இயக்குநர்களில் பாலாவுக்குத் தனி இடம் இருக்கிறது. களம், தளம் இரண்டிலுமே பிரமிப்பூட்டுகிற அளவு வித்தியாசம் காட்டுகிற படைப்பாளி. மென்சோகமும், பெருங்கோபமும் பேசுகிற படங்களில் கடைக்கோடி மனிதர்களை கதை நாயகர்களாக்கி அவர் கதை சொல்கிற நேர்த்தி ரசிக்கும்படியானது. ஏதோ ஒரு கிராமத்திலிருந்து கிளம்பிய இளைஞர், தன் அனுபவங்களையே விதைகளாக்கி, விருட்சமாக வளர்ந்து வருகிறார். அவரது கதையை அறிந்துகொள்ள விகடன் வாசகர்களைப் போலவே நானும் விரும்பினேன். தான் கடந்து வந்த பாதையை இருபத்தோரு வாரங்கள் விகடன் வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டார் பாலா. அதை அவர் விவரித்த விதமே ஒரு சிலிர்ப்பூட்டும் நாவல்போல அமைந்தது. திரைத்துறையில் வளரத் துடிக்கிற, பொதுவாழ்வில் சாதிக்கத் தவிக்கிற ஒவ்வொரு இளைஞனும் படுகிற அவஸ்தைகளை, சுமக்கிற அவமானங்களை, கடந்து வருகிற தடைகளை நான் அறிவேன். அப்படி ஒருவராக இருந்த பாலா.. இன்று ஒரு தேர்ந்த படைப்பாளியாக உருவானதன் ரகசியத்தை விவரிக்கிற இந்தத் தொடர், அதற்கான மரியாதையைப் பெற்றதில் வியப்பில்லை.
5 கண் கல்ங்க வைக்கும்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று விரும்பும் மனிதர்கள் நிச்சயாமாக படிக்க வேண்டும். ஆனால் அதையும் மீறி, மனித நேயத்தை நிச்சயமாக கற்றுத்தரும்.
Abdul Rahman 29-04-2024 10:23 pm