எளிய பின்னணி கொண்ட சமூகத்திலிருந்து வருபவர்களுக்கு எட்டாக்கனியாகவே இன்றுமிருக்கும் இவ்விளையாட்டில் நம்மிலொரு நடராசன் அணிக்குள் நுழைவதே ஒரு சாதனையாகக் கொண்டாடப்படுவதையும் உளவியல் காரணங்களோடு சுவைபட விவரிக்கிறது இச்சிறு வெளியீடு.
பந்துகள் எல்லைக்கோட்டை கடக்கும்போதெல்லாம் கைத்தட்டி ஆர்ப்பரிக்கும் பெரும்பான்மை சமூகத்து இளைஞர்கள் அந்த மைதானத்துக்குள் காலெடுத்து வைக்கவே சந்திக்கும் துயரங்கள் சொல்லி மாளாதவை. இதன் பின்னுள்ள நுட்பமான அரசியலை மிக நேர்த்தியாக ஒரு சிறுகதையைப் போல எழுதியிருக்கும் தோழர் முருகவேல் ப்ரியா, இச்சிறு நூலுக்காக கொடுத்திருக்கும் உழைப்பு ஒரு முனைவர் பட்ட ஆய்வு மாணவரின் உழைப்புக்கு கொஞ்சமும் குறைந்தது அல்ல.
Be the first to rate this book.