ஆரம்பநாளிலிருந்து எழுதிய கவிதைகளின் முழுத் தொகுப்பு ‘தீராப்பகல்’ 2016இல் வெளிவந்தது. ஏழு வருடங்களுக்குப் பிறகு இந்தத் தொகுப்பு. முன்னொரு முறை, புனைகதை பகற்கனவு என்றும், கவிதையைக் கனவு என்றும் ஒப்பிட்டு எழுதினேன். உறக்கத்தின் மடியில் தன்னிலையை முழுக்க உதிர்த்த பிறகு நிகழ்கிற கனவே கவிதை. நிகழும்போதே பதிவு செய்யப்பட்ட கனவு. உருவமும் உள்ளடக்கமும் தனித்தனியாகத் தெரியக் கூடாத மாயவடிவம். விஞனின் சாதாரண அனுபவத்தைவிட, சாதாரணனின் கவிதானுபவம் பொருட்படுத்தத்தக்கது - இந்தக் கவிதைகளில் அதை நிகழ்த்திப் பார்க்கவே முயன்றிருக்கிறேன்.
Be the first to rate this book.