தொழிலுக்காகக் கற்றது ஆங்கிலமும் ஆங்கிலத்தைக் கற்பிக்கும் முறையும். மனம் விரும்பி ஈடுபட்டது பழந்தமிழ் இலக்கியம், இலக்கணம், தற்கால இலக்கியம். படிப்பதற்கு மனம் இயல்பாக நாடியவை அறிவியல், தத்துவம், உளவியல், துப்பறியும் கதைகள். எல்லாவற்றுக்கும் மேலாக, அறிந்ததற்கு அப்பாலுள்ள பிரக்ஞைத் தளங்களைக் கண்டறிய உதவும் சிந்தனைகள்— திருமூலரிலிருந்து, தாவோவிலிருந்து, ஜென், சூஃபி, குர்ட்ஜீஃப், ஜே. கிருஷ்ணமூர்த்தி, கார்லோஸ் காஸ்டெனடா ஈறாக. ஆனால், எதிலும் நிலைகொள்ள முடியாத, அந்நியன் உணர்வு. இவற்றின் வெளிப்பாடுகள் ஒருதன்மையன அல்ல. அதனால்தான் செய்நேர்த்தியும், எளிதில் எதிலும் சிக்கிக்கொண்டுவிடாத ஜாக்கிரதையும், எள்ளலும், புராதனமும், நவீனமும், கலையும், விளையாட்டுத்தனமும் இவர் கவிதைகளில் கலந்து காணப்படுகின்றன.
Be the first to rate this book.