எங்கோ ஒரு மூலையில் வைரஸ் ஒன்று உருவாகி, சர சரவென உலகம் முழுக்கப் பரவும்போது, ‘வைரலின்’ நிஜ அர்த்தம் நமக்குப் புரிந்தது. இதுதான் வைரல்!!!
இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் பெரும்பாலும் கரோனா குறித்த ஆய்வுகளின் வழியே வைரஸின் தன்மையைப் பேசுபவை. கோடி ஆண்டுகளுக்கு முன்னால் வைரஸ் தொற்றினால்தான் இன்று பாலூட்டிகளிடமும் மனிதரிடமும் உள்ள தாய்-சேய் இணைப்பு திசு உருவானது – எத்தனையோ வைரஸ்கள் இருக்கின்றன – ஆனால், இந்த கரோனா வைரஸ் மட்டும் உலகம் எப்படி முழுக்கப் பரவியது என்னும் கேள்விக்கான பதில் இத்தொகுப்பில் இருக்கிறது. கரோனா சார்ந்த ஆய்வில், நமக்குத் தெரிந்ததெல்லாம் தடுப்பூசிதான் – ஆனால் அது மட்டும் போதுமா? இப்படிப் பல புதிர்களுக்கு இத்தொகுப்பு விடை காண முயற்சிக்கிறது.
ஆசிரியர் குறிப்பு:
முனைவர் ஹேமபிரபா - இவர் சென்னையில் இளங்கலை பொறியியல் படிப்பை முடித்து, பின்னர் பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது இஸ்ரேல் டெக்னையான் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக இருக்கிறார். கடந்த ஆறு ஆண்டுகளாக தமிழில் அறிவியல் கட்டுரைகள், கதைகள், மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் உள்ளிட்டவற்றை எழுதி வருகிறார். பல முக்கிய தளங்களில் பொதுமக்களிடையே அறிவியல் பரப்புரையும் செய்து வருகிறார். இவரின் முதல் புத்தகம் இது. அறிவியல் எழுத்துக்களே சமூகத்தில் நிலவும் அறியாமைகளைப் போக்கும் என்று நம்பக் கூடியவர்.
Be the first to rate this book.