'இது சிறகுகளின் நேரம்!' என்ற தலைப்பில் கவிக்கோ அப்துல் ரகுமான், ஜூனியர் விகடனில் முதலில் 90 இதழ்களுக்கு எழுதியபோது, உற்சாகத்தோடும் உள்ளம் கசிந்தும் மெய்சிலிர்த்தும் வாசகர்களிடமிருந்து கடிதங்கள் குவிந்துகொண்டே இருந்தன. மிகமிகச் செறிவான, புரிந்துகொள்ளக் கடினமான தத்துவக் கருத்துக்களையும் தன் பேனா எனும் மந்திரக்கோலால், ஆழ்ந்த தமிழறிவால் மிகமிக எளிமையாக்கி வாசகர்களுக்கு ருசிக்கக் கொடுத்தார் கவிக்கோ. இடையில் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக சிறிதுகாலம் தொடரை அவர் நிறுத்தியபோது, 'எப்போது மறுபடியும் கவிக்கோவின் தத்துவத் தமிழ் விருந்து?' என்று வாசகர்கள் எங்களைத் துளைத்தெடுத்து விட்டார்கள். ஒரு இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் 'இது சிறகுகளின் நேர'த்தை அவர் நகரவிட்டபோது, முன்னிலும் செறிவான கருத்துக்கள்... முன்னிலும் எளிமை... முன்னிலும் இனிமை! பல சமயங்களில் அவர் அனுப்பும் அத்தியாயங்களைப் படிக்கும்போது எனக்கும் அவருக்கும் இடையே இனம்புரியாத ஒரு டெலிபதி அலையோடு கிறதோ என்றுகூட ஆச்சரியப்படுவேன்.
Be the first to rate this book.