ஓர் உண்மையான குருவின் தந்தையாகவும் சிறந்த ஞானாசிரியராகவும் இருந்த ஹஸ்ரத் ஆஸாத் ரஸூல் அவர்களிடம் வெளிநாட்டவர்கள், குறிப்பாக மேற்கத்தியர்கள், கேட்ட கேள்விகளும் அவற்றிற்கு அவர் கொடுத்த பதில்களையும் கொண்ட தொகுப்பு-தான் இந்த நூல். நாற்பது கேள்விகளும் பதில்களும் அடங்கிய இந்நூல் சூஃபித்துவம் பற்றிய சந்தேகங்கள் அனைத்தையும் தீர்த்துவைக்கிறது. இந்நூலில் சிக்கலான சொற்களில் ஆஸாத் ரஸூல் பேசவில்லை. எனினும், அவரது சொற்களில் வெளிப்படும் ஆழம் விவரிக்கப்பட்ட பாதையின் பிரத்தியேகமான தன்மையை நோக்கி வாசகரை இழுக்கிறது. முழுமையான ஆன்மிக மாற்றம் பெறுவது எப்படி, அதற்கான வழிமுறைகள் என்ன என்பதையெல்லாம் இதயத்தை நோக்கித் திரும்புதல் என்ற இந்த நூல் எடுத்துரைக்கிறது. சூஃபித்துவம் பற்றி ஒன்றுமே தெரியாதவர்களுக்கும், ஏற்கெனவே அதில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் இந்நூல் பயனளிக்கும். இந்த நூலில் காணப்படும் உரையாடல்கள் மூலம் புதியவர்களுக்கு சூஃபித்துவம் பற்றிய அறிமுகம் கிடைக்கும். தசவ்வுஃப் எனும் பாதையில் வெற்றிகரமாகப் பயணித்த ஒருவரின் ஒளியிலிருந்து இரு சாராருக்குமே உள்ளுணர்வுப் பூர்வமான ரத்தினங்கள் கிடைக்கும். இஸ்லாம் என்ற ரோஜாச் செடியிலிருந்து சூஃபித்துவம் என்ற ரோஜாவைப் பிரிக்கவே முடியாது. இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்கள் அந்தத் தெளிவையும் புரிந்துகொள்ளலையும் ஏற்படுத்தும். இன்ஷா அல்லாஹ்.
Be the first to rate this book.